Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் குளத்தைச் சுத்தம் செய்த மாணவர்கள்!

புராணப் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்டது மயிலாப்பூரின் சித்திரைக் குளம். சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர்  கோயிலின் அருகே உள்ளது கேசவ பெருமாள் கோயில். இந்தக் கோயிலின் திருக்குளம்தான் சித்திரைக்குளம். சந்திர புஷ்கரணி, சந்திர தீர்த்தக் குளம் என்று போற்றப்படும் இதில்தான் ஸ்ரீமயூரவல்லித்தாயார் திருக்காட்சி தர எழுந்தருளினார் என்றும் சந்திரன் தனது சாபங்கள் நீங்க முழுகினார் என்றும் தல புராணம் கூறுகிறது.

மாதவன்

பெருமைகள் பல கொண்ட இந்தத் தீர்த்தம் பல காலமாகவே சிதிலமடைந்து பாழ்பட்டு நிலையில் இருந்து வருகிறது. அவ்வப்போது இந்தக் குளத்தை சீர்செய்து வந்தபோதும் தற்போது செடிகொடிகள் மண்டிப்போய் வீணாகக் கிடந்து வருகிறது. இதனால் இந்தக் குளத்தைச் சீரமைக்க நேற்றைய தினம் களமிறங்கியது விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் படை. 100 பேர் கொண்ட மாணவர்கள் குழு ஒன்று நேற்று திருக்குளத்தைச் சுத்தம் செய்தது. சென்னையைச் சேர்ந்த தான்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைமையின் கீழ் இந்தக் குழுவும் சென்னை மாநகராட்சி துப்புரவாளர்கள் குழுவும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டது.

சித்திரைக்குளம்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close