Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகனின் அலட்சியத்தால் தாய்க்கு நேர்ந்த துயரம்!

தனிமையில் இருக்கும் தன் அம்மாவிடம் ஒரு ஆண்டுக்கும் மேலாகப் பேசாமல் இருந்திருக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் அவரின் மகன். தற்செயலாக ஊர் திரும்பிய அவருக்குப் பூட்டிய வீட்டில் தன் தாயை எலும்புக் கூடாக மட்டுமே பார்க்க நேர்ந்த துயரம் மும்பையில் நடந்துள்ளது.

விமானம்

ஆஷா ஷகானி என்ற 63 வயது பெண், மும்பையைச் சேர்ந்தவர். இவரின் ஒரே மகனான ரித்துராஜ் அமெரிக்காவில்  மென்பொருள் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை கடந்த 2013-ம் ஆண்டில் இறந்து போனர். இதையடுத்து அவருடைய தாய் ஆஷா ஷகானி, மும்பையில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக, தன் தாயுடன் தொடர்பு இல்லாத நிலையில் தற்செயலாக நேற்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) தான் சொந்த ஊரான மும்பை திரும்பி உள்ளார்.

வீட்டிற்கு வந்த ரித்துராஜ் தன் வீட்டின் காலிங் பெல் அடித்தும் தாயை பலமுறை அழைத்தும் பதிலில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அருகில் உள்ள பூட்டு உடைக்கும் கடைக்காரரை அழைத்து வந்து கதவைத் திறந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற ரித்துராஜ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே அவருடைய தாய் இறந்து பல நாள்கள் ஆன நிலையில், எலும்புக்கூடாக கிடந்துள்ளார். இதனால் அதிரிச்சியுற்ற ரித்துராஜ் கதறி அழுது இருக்கிறார். 

எலும்புக் கூடாக இருந்த ஆஷாவின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அதைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த (2016) வருடம் ஏப்ரல் மாதத்தில் தன் தாயுடன் கடைசியாக பேசியதாக ரித்துராஜ் கூறியதைக் கேட்ட போலீஸார் உள்பட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், தன்னால் தனியாக வசிக்க முடியவில்லை முதியோர் இல்லத்திலாவது சேர்த்து விடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆஷா. மகனின் அலட்சியத்தால் அவருடைய தாயை எலும்புக் கூடாகவே பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆஷாவின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close