Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.க.ஸ்டாலின் 12-ம் தேதி லண்டன் செல்கிறார்!

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ம் தேதி லண்டன் செல்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழக துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது தனிப்பட்ட பயணமாக மூன்று மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ குடும்பத்துடன் வெளிநாடு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற நகரங்களுக்குச் சென்று வருவார். கடந்த மாதமே, அவர் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அவர் வெளிநாட்டுப் பயணத்தை தள்ளி வைத்தார்.

ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து, இப்போது முரசொலி பவளவிழா வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார். ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளில் முரசொலி பளவ விழா கொண்டாட்டங்கள் சென்னையில் நடைபெறுகிறது. பத்திரிகை அதிபர்கள் கலந்துகொள்ளும் முதல்நாள் விழாவில் நடிகர் கமல் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரண்டாம் நாள் விழாவில் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த விழா முடிந்தவுடன் ஸ்டாலின், லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ''தளபதி வெளிநாடு செல்வது உறுதியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி லண்டன் செல்வார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன'' என்றார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close