Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குத்துவிளக்கு ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட லெட்சுமிபுரம் கிராம மக்கள்..!

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இன்று குத்துவிளக்கு ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கிராமப் பெண்கள் கைகளில் குத்துவிளக்கு ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சத கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, சுமார் 25 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் லெட்சுமிபுரம் மக்கள். 

இதனால், தனது நண்பர் பெயருக்கு அந்த கிணற்றை எழுதிவைத்துவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இந்தக் கிணறு விவகாரம் இன்று வரை ஒரு முடிவை எட்டாத நிலையில், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் கிராம மக்கள். அதன் தொடர்ச்சியாக இன்று குத்துவிளக்கு ஏந்திப் போராட்டம் நடத்தினர். அப்போது, "வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும், போராடுவோம் போராடுவோம் கிணறு கிடைக்கும் வரை போராடுவோம்..." போன்ற கோஷங்களை எழுப்பினர். கிணற்றை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த கிராம மக்கள், நாளை மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close