Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதிக்கத் தயார்... அன்புமணி ராமதாஸ் பதிலடி!

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், அது குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, "பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் பற்றிய விவாதத்திற்கான இடம், தேதியை செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும் " என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

மேலும், இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், அது குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். அவரது துணிச்சலை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.

உதயச்சந்திரன்

உதயச்சந்திரனின் நியமனத்துக்குப் பிறகுதான் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டவை என்பதால் அதற்காக அவருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் பா.ம.க. மனபூர்வமாக பாராட்டு தெரிவித்தது. இத்தகைய சீர்திருத்தங்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த ஒத்துழைப்பையும் வரவேற்றோம். ஆனால், அனைத்துமே ஆரம்ப ஜோர் என்பதைப் போன்று தொடக்கத்தில் சில மாதங்கள் நேர்மையாக செயல்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதன்பிறகு ஊழல் சேற்றில் புரளத் தொடங்கிவிட்டது என்பதுதான் வேதனை. இதற்கு செங்கோட்டையன்தான் பொறுப்பு.

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றி அண்மைக்காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறு உறுதி செய்கிறேன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நண்பர் செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close