Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதய சிகிச்சை வழக்கு: நீதிபதிகள் புதிய உத்தரவு!

இதய சிகிச்சை அளிக்க தமிழகத்தில் பல இடங்களில் போதிய வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இந்நிலையில், இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில்,  'மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதய சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6,151 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். கடந்தாண்டு 14,237 என்று நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சென்னை, மதுரை, கோவையைத் தவிர பிற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கேத் லேப் மற்றும் ஹார்ட் லங் இயந்திரங்கள் நிறுவப்படாமல் உள்ளது. பிற இடங்களில் சிகிச்சை பெற முடியாது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இரவு நேரங்களில் ஸ்டெண்ட் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான கேத் லேப் மற்றும் ஹார்ட் லங் இயந்திர வசதியை ஏற்படுத்த வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  பதில் மனுக்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களை நீதிபதிகள் குறித்துக்கொண்டனர்.  இதைத் தொடர்ந்து, "அனைத்து அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் ஏன் இந்த வசதி  ஏற்படுத்தவில்லை.  மருத்துவ மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெறுவர்?  ஏழை மக்களின் நிலை என்ன?" என கேள்வி எழுப்பி,  மனு தாரரின் மனுவை பரிசீலித்து ஒரு ஆண்டுக்குள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் திறந்த இதய அறுவை சிகிச்சை, பை பாஸ் சர்ஜரி துறை மற்றும் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்த உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close