Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"எனது மகன்களை மதம் மாற்றிவிட்டார்கள்..மீட்டுத் தாங்க!" கலெக்டரை அதிரவைத்த புகார்!

                       


 

கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம், 'அய்யா என் மகன்களை பக்கத்துட்டு வீட்டு ஆள் மூளைச்சலவை செய்து இஸ்லாமிய மதத்துக்கு கட்டாயமாக மதம் மாற்றிவிட்டார். அவர்களை மீட்டு, பழையபடி எங்களிடம் நீங்கதான் ஒப்படைக்கணும்' என்று மனோகரன் என்ற பெரியவர் புகார் கொடுக்க,'இது என்ன வில்லங்க புகார்?' என்று கலெக்டரே ஒருகணம் ஜெர்க்கானார். 
 

கிராம மக்களோடு வந்து அத்தகைய புகாரைக் கொடுத்த மனோகரிடம் பேசினோம். "தம்பி எனக்கு சொந்த ஊர் தோகைமலை. சொந்த ஊரில் எனது பெயரில் ஹோட்டலும் வச்சு நடத்திட்டு வர்றேன். ஹோட்டலில் எனக்கு உதவியாக எனது மகன்களான ராமமூர்த்தி, மீனாட்சிசுந்தரம் இருவரும் இருந்து வந்தனர். இந்தச் சூழலில், எங்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஏற்கெனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறிய நாராயணன் மகன் சுரேஷ் என்பவர், எங்க பகுதியில் பல இளைஞர்களை மூளைச் சலவை செய்து கட்டாய மதமாற்றம் பண்ணி வந்தார். அதேபோல், எனது இரு மகன்களையும் ஏதேதோ ஆசை வார்த்தைகள் கூறி மூளைச் சலவை செய்து, அவர்களையும் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றிவிட்டார். எவ்வளவோ சொல்லியும் இரு மகன்களும், 'மதம் மாறுனது மாறுனதுதான்'னு சொல்லுறாங்க. இதனால், எனது மனைவி மனமுடைந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.


தோகைமலையில் உள்ள மசூதிக்கு அங்குள்ள இஸ்லாமிய பெரியவர்கள் எனது மகன்கள் இருவரையும் வர வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. அதனால், எனது இரு மகன்களையும் மதமாற்றியவர்கள் எதுவும் பயங்கரவாத குரூப்பா இருக்குமோன்னு பயமா இருக்கு. இதுசம்பந்தமாக, தோகைமலை காவல்நிலையத்தில் 2.8.2017 அன்று புகார் கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மகன்களை கட்டாய மதமாற்றம் செய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனது மகன்கள் இருவரையும் மீட்டுத் தர கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close