Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு: ஐந்து பேருக்கு ஜாமீன்!

தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கில், ரூபன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

high court

தி.மு.க கட்சித்தொடர்பான கருத்துக்கணிப்பில் மு.க.அழகிரியை பின்னுக்குத் தள்ளி, மக்கள் மனதில் அழகிரியின் இமேஜை குறைக்க நினைக்கிறார்கள் என்று கூறி மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், கடந்த 2007 மே மாதம் பெட்ரோல் குண்டு வீசி தினகரன் அலுவலகத்தை எரித்தனர் . இதில் தினகரன் ஊழியர் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பான வழக்கில் தி.மு.க முக்கிய பிரமுகர் அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரை மதுரை மாவட்ட சி.பி.ஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை திர்த்து சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்ற உத்தரவின்படி ரூபன், முத்துப்பாண்டி உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.  இவர்கள் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஸ், சதீஸ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close