Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவலர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு..!

தாராபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பு கட்டடத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். அதற்கான நிகழ்வு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் மூலம் 3 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 69 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 80 வீடுகள் ரூ.7 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் உட்பட 3 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாக  கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில், காவல் ஆய்வாளர்கள் குடியிருப்பு தலா - 895 சதுர அடி பரப்பளவும், உதவி ஆய்வாளர்கள் குடியிருப்பு தலா - 725 சதுர அடி பரப்பளவும், காவலர்கள் குடியிருப்பு தலா 650 சதுர அடி பரப்பளவும் என மொத்தம் 4955.75 சதுர மீட்டர்  பரப்பளவு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close