Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் கலந்தாய்வு: மீதம் இருப்பது 4 நாள்கள்... காலியாக இருப்பது 1 லட்சம் இடங்கள்!

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றுவருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று, 16-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது.

பொறியியல் கலந்தாய்வு

நேற்றைய கலந்தாய்வுக்காக 7,108 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 4,085 இடங்கள் நிரப்பப்பட்டன. 2,989 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. நேற்றைய கலந்தாய்வில் மட்டும் அழைப்பு விடுத்தவர்களில் 42.05 சதவிகிதம் பேர் பங்கேற்கவில்லை. குறிப்பாக, தினசரி கலந்தாய்வில் ஆப்சென்ட்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 16 நாள்கள் முடிவில் 70,741 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக 37,468 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். 1,04, 715 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

இதனிடையே, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் இருப்பதால், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 60 சதவிகித இடங்கள் காலியாகவே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close