Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முஸ்லிம் மாணவிகளுக்கு உதவித்தொகை

முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு தற்போது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு உதவித்தொகை அளிக்க முன் வந்திருக்கிறது. 

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, ஆண்டுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகையும் மேல் நிலை வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு 12,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க திட்டமிட்டிருக்கிறது. 

முஸ்லிம்

அதோடு, பட்டப்படிப்பு முடித்த மாணவிகளுக்கு 51 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் விகிதத்தை அதிகப்படுத்தவும் அவர்கள் பெற்றோரை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.   

இந்தத் திட்டத்தை மத்திய அரசு உதவியின் கீழ் செயல்படும்  மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. கூடிய விரைவில், பிரதமர் நரேந்திர மோடியின் அனுமதியோடு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ஷாகிர் ஹூசைன் தெரிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close