Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புழல் சிறையில் 9 செல்போன்கள், கஞ்சா பறிமுதல்!

சென்னை புழல் மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், 9 செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


புழல் சிறையில், கைதிகள் மத்தியில் அதிகமாக செல்போன் புழக்கம் இருந்துவருவதாகப் புகார்கள் எழுகின்றன. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைநடத்தி, செல்போன்களைப் பறிமுதல் செய்துவருகின்றனர். இருப்பினும், கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்னர், புழல் சிறையில் இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. அதில், கைதிகள் பயன்படுத்திய 5 செல்போன்கள், 5 சிம்கார்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையில், 9 செல்போன்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், செல்போன் பறிமுதல்செய்யப்பட்டுள்ள கைதிகளிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. கைதிகளுக்கு செல்போன் கிடைத்ததற்குப் பின்னணியில் சிறைக்காவலர்கள், அதிகாரிகள் உடந்தையாக இருந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. கைதிகள் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறைச்சாலையில் ஜாமர் கருவி பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 250 செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close