Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராகத் திரளும் கிராமங்கள்! மாபெரும் போராட்டம் நடத்த முடிவு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இன்று தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டினர். நேற்று குத்துவிளக்கு ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன் தொடர்ச்சியாக, தற்போது அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டினர். இன்று மாலை மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய கிராம கமிட்டியின் முக்கியஸ்தர் ஜெயபால், "கிணற்றை மீட்கும் வரை போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்துக்கு சுற்றியிருக்கும் கிராமங்களின் ஆதரவைத் திரட்ட இருக்கிறோம். அருகில் இருக்கும் வடபுதுப்பட்டி, வடவிரநாயக்கன்பட்டி, அம்மாபுரம், அம்மாபட்டி, சொக்கத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி, மீனாட்சிபுரம், மதுராபுரி, அழகபுரி, கிண்டிகாரன்பட்டி, செட்லூர், ஜல்லிப்பட்டி, காமுக்காம்பட்டி, சரப்பட்டி போன்ற கிராமத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். சுற்றியுள்ள கிராமங்களுக்கு எங்கள் லெட்சுமிபுரம்தான் தாய்கிராமம் என்பதால், நிச்சயம் போராட்டத்தில் அனைத்துகிராமமும் கலந்துகொள்ளும். விரைவில் அந்த மாபெரும் போராட்டம் நடைபெறும்" என்றார். 

முன்னதாக, ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சச கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, 25 நாள்களாகப் போராட்டம் நடத்தினர். இதனால், தனது நண்பர் பெயருக்கு அந்தக் கிணற்றை எழுதிவைத்துவிட்டார். இந்தக் கிணறு விவகாரம் இன்று வரை ஒரு முடிவை எட்டாத நிலையில், தொடர் போராட்டங்களில் லெட்சுமிபுரம் கிராம மக்கள் இறங்கியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close