Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி கடும் சரிவு!

தமிழ்நாட்டில், கரும்பு உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய விலையை முழுமையாகக் கொடுப்பதில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், தங்களது கரும்பு சாகுபடிப் பரப்பை வெகுவாக குறைத்துக்கொண்டே வருகிறார்கள். கரும்பு உற்பத்தி குறைந்ததால், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தியும் கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. 2011-12-ம் ஆண்டு 21.3 லட்சம் டன் சர்க்கரை உற்பத்திசெய்யப்பட்டது. 2016-17-ம் ஆண்டு உற்பத்திசெய்யப்பட்டுள்ள சர்க்கரையின் அளவு, 9.6 லட்சம் டன்.

கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை, கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்தவையாகவே கடந்துசெல்கிறது. இதனால் விவசாயிகளின் களப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி, சாமி. நடராஜன் இதுகுறித்த ஆதங்கத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ''கடுமையான வறட்சியிலும்கூட, இங்குள்ள விவசாயிகள் தங்களது உழைப்பைக் கொட்டி, கரும்பு விளைவித்துக்கொடுக்கிறார்கள். ஆனால், சர்க்கரை ஆலைகள் இதற்கு முழுமையாகப் பணம் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள், சட்டப்படி தரவேண்டிய நிலுவைத் தொகை 1,620 கோடி ரூபாய். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை 255 கோடி ரூபாய். 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை லாபப் பங்கீட்டுத் தொகையாக இங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கு 300 கோடி ரூபாய்  தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் விலை கிடைத்தால்தான் விவசாயிகளால் ஓரளவுக்காவது சமாளிக்க முடியும். இதே நிலை தொடர்ந்தால், கரும்பு உற்பத்தி முழுமையாகவே கைவிடக்கூடிய நிலை உருவாகும்” என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close