Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி-யால் 50 சதவிகித லாரிகள் ஓடவில்லை- கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள் சங்கம்

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 'ஒரே நாடு; ஒரே வரி' என சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தினார். இதனால் இந்தியா முழுவதும் 50% லாரிகள் ஓடாததால் வர்த்தகம் முடக்கிவிட்டது என்கிறார் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னகேசவன்.

இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது, ''இந்தியாவில் பெரும்பாலும் லாரிகள் மூலமே வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது. இதற்காக தமிழ் நாட்டில்  4.25 லட்சம் சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக லாரிகள் மூலம் வர்த்தகத் தொடர்பு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதிலும் குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் உள்ள லாரிகளின் பங்களிப்பு அதிகம். இந்தியாவில் உள்ள மாநிலங்களை ரத்த நாலாங்களைப் போல இணைப்பது லாரிகளும், அது சார்ந்த தொழில்களும் ஆகும்.  மத்தியப்பிரதேசத்தில் இருந்து பருப்பு வகைகளும், டெல்லி, காஷ்மீரில் இருந்து பழங்களும், ராஜஸ்தானில் இருந்து மார்பில்ஸ், டையில்ஸ்களும்,  குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து மில் ஜவுளி ரகங்களும், குஜராத் நாசிக்கில் இருந்து பெரிய வெங்காயங்களும் என ஒரு நாளைக்கு 5000 சரக்கு லாரிகள் தமிழ்நாட்டுக்குள் வருகிறது. ஒரு நாளைக்கு பெரிய வெங்காயம் மட்டும் 300 லோடு தமிழகத்துக்கு வருகிறது. அதேபோல்  தமிழ்நாட்டில் இருந்து கைத்தறி, வெல்லம், ஸ்டார்ஸ், வெள்ளைக்கல் மாவு போன்ற பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு மற்ற மாநிலங்களுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் இருந்து சரக்கு லாரிகள் ஜம்மு- காஷ்மீர், வங்கதேசம் வரை சென்று வருகிறது.  

ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப்  பிறகு 50% லாரிகள் ஓடவில்லை. இதனால் வர்த்தகமே முடங்கிக் கிடக்கிறது. இந்தியா முழுவதும் ஜிஎஸ்டிக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் பொருள்களை  யாரும் ஏற்ற முன்வரவில்லை. லோடு ஆவதற்கே 4, 5 நாள்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் குஜராத்தில் உள்ள சூரத்தில் இருந்து மில் ஜவுளிகள் அதிக ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், அத்தொழில் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.  லாரி உரிமையாளர்களையும், புக்கிங் ஏஜெண்டுகளையும் ஜிஎஸ்டிக்குள் வர வேண்டும் என்கிறார்கள். விற்பவர்களிடம் இருந்து பொருள்களை ஏற்றி வாங்கக்கூடியவர்களிடம் பொருள்களைக் கொடுக்க கூடியவர்கள். எங்களை ஜிஎஸ்டிக்குள் வரச் சொல்வது எந்த விதத்தில் நியாயம். நாங்கள் ஒரு லாரிக்கு மாதம்தோறும் வருமான வரி 7,500 கட்டுகிறோம். டீசலுக்கு 25% வாட் வரி கட்டுகிறோம். மீண்டும் எப்படி ஜிஎஸ்டி கட்ட முடியும்.  லாரிக்கு 70% முதல் 80% வரை  டீசல் அடிப்பதால்தான் செலவு ஆகிறது. டீசல், பெட்ரோலையும்  ஜிஎஸ்டி-யில் கொண்டு வர வேண்டியதுதானே ஏன் அதைக் கொண்டு வரவில்லை.

லாரி உரிமையாளர்களை ஜிஎஸ்டி-க்குள் வர வேண்டும் என்றால் டீசல், பெட்ரோலையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும். லாரி சம்பந்தமான தொழில் செய்யக்கூடியவர்கள் படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள். நாங்கள் மாதம் 3 முறை கம்ப்யூட்டரில் வரவு- செலவு காட்ட வேண்டும் என்கிறார்கள். அதற்காக புதியதாக ஆட்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்க எங்களால் முடியாது. இப்படி ஜிஎஸ்டி-யால் பல குழப்பங்கள் இருக்கிறது. மத்திய அரசு இதையெல்லாம் கவனத்தில்கொண்டு ஜிஎஸ்டி-யின் சட்ட திட்டங்களை எளிமையாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்'' என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close