Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு எதிரான வழக்கில் கலெக்டர் பதில் அளிக்க உத்தரவு!

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரிய வழக்கில் கன்னியாகுமரி கலெக்டர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ஜெ மணல் சிற்பம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக, நாகர்கோவில் வடசேரி பகுதியில் மணல் சிற்பத்தை அ.தி.மு.க நிர்வாகிகள் வைத்ததைத்  தொடர்ந்து, கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்களும் மற்றும் தி.மு.க-வினரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளத்தில் தி.மு.க-வினரின் கொடியை அகற்றிய காவல்துறைக்கு, 'ஏன் இந்த மணல் சிற்பத்தை அகற்ற நேரமில்லையா' எனக் கேட்டு தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் போராட்டம் நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த மகேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அதில், 'நாகர்கோவில் வடசேரி மாநில நெடுஞ்சாலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ மணல் சிற்பம் அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார் சார்பில் உருவாக்கப்பட்டது. அந்த மணல் சிற்பம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கேட்டிருந்தார். இந்த பொதுநல மனுவை விசாரித்த  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, மணல் சிற்பம் பிரச்னை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, மனு மீதான விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close