Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருக்கலைப்பின்போது உயிரிழந்த மாணவி: மருத்துவர் மீது வழக்கு

கருக்கலைப்பு

ஹைதராபாத்தில், ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தபோது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவிக்கு சிகிச்சையளித்த  மருத்துவர் கிரிஜா ராணி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி,  20 வாரங்கள் கடந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதியில்லை. அப்படி செய்வதாக இருந்தால், நீதிமன்ற அனுமதியுடன்தான் செய்துகொள்ள வேண்டும். ஆனால்,  21 வயதாகும் ஹரிகா என்ற பொறியியல் மாணவி, கடந்த 5-ம் தேதி தனது ஆண் நண்பருடன் கருக்கலைப்பு செய்வதற்காக அனுஷா மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். கருக்கலைப்புச் செய்ய சம்மதித்ததுடன், அதற்கான கட்டணமாக 20,000 ரூபாய் பெற்றுக்கொண்டிருக்கிறார் மருத்துவர் கிரிஜா. ஆனால், கருக்கலைப்பின்போது, ஹரிகாவுக்கு அதீத உதிரப்போக்கு ஏற்பட, உடனே மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டார்.  ஆனால்,  அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அனுஷா மருந்துவமனைமுன் ஹரிகாவின் குடும்பத்தினர்  போராட்டம் நடத்தினர். தற்போது மருத்துவர் கிரிஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close