Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மர்ம காய்ச்சலால் தொடர் விடுமுறை அறிவித்த கல்லூரி!

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதியில் தங்கி பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து கல்லூரிக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு செய்முறைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

killikulam agri college

இக்கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 5-ம் தேதி முதல் மாணவ, மாணவிகளுக்குத் தலைசுற்றல், வாந்தி மற்றும் தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. கடந்த 2 நாள்களாக விடுதியிலுள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கும் காய்ச்சல் தொடர ஆரம்பித்த நிலையில், வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 15-ம் தேதி வரை கல்லூரிக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு செய்முறைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர்.ராமலிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ''போன வாரம் ஊட்டிக்கு டூர் போயிட்டு வந்ததுல சில மாணவர்களுக்கு கிளைமேட் ஒத்துக்காம தலைவலியும், சில மாணவர்களுக்கு லேசான காய்ச்சலும் இருந்தது. விடுதியிலுள்ள மற்ற மாணவர்களுக்கும் காய்ச்சல் தொடர்ந்து பரவ ஆரம்பிச்சதும், வல்லநாடு பி.எச்.சி  டாக்டர்கள் கல்லூரியில் முகாம் நடந்தி பரிசோதனை செய்தார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை நடந்துச்சு. கொசுவை ஒழிக்க கல்லூரி வளாகம் முழுவதும் கடந்த 2 நாளாக தினமும் கொசுமருந்து அடிக்கும் பணி நடந்துட்டு வருது. வரும் 21-ம் தேதி செமஸ்டர் எழுத்து தேர்வு ஆரம்பிக்குது. அந்தத் தேர்வுக்குப் படிப்பதற்காக ஏற்கெனவே வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விடுமுறை அறிவிச்சிருக்கோம். இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பும் இருந்ததுனால படிப்பு விடுமுறையை முன்கூட்டியே விட மாணவர்கள் கேட்டதுனால கூடுதலா விடுமுறை அளிச்சிருக்கோம். நேற்று தொடங்குவதாக இருந்த செய்முறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கு. செமஸ்டர் தேர்வுகள் முடிந்ததும் இந்தச் செய்முறைத் தேர்வுகள் நடக்கும். கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு மட்டும்தான் டெங்கு அறிகுறி இருந்தது. மற்ற மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்புதான் என டாக்டர்கள் சொல்லிட்டாங்க’’ எனக் கூறினார்.       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close