Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

630 லிட்டர் தாய்ப்பால் தானமாகப் பெற்ற அரசு மருத்துவமனை!

தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கடந்த இரண்டு வருடங்களாக சுமார் 630 லிட்டர் தாய்ப்பால் தானமாகப் பெறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.

பெண்களுக்கு வழக்கத்தைவிட அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்போது, மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் அதைத் தானமாக கொடுக்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு வருடங்களுக்கு முன்பாக தாய்ப்பால் வங்கி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டது. மேலும், அத்திட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவமனையில் போதிய அளவு விழிப்பு உணர்வு செய்ததன் விளைவாக, கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 3 ஆயிரத்து 70 பெண்களிடமிருந்து 630 லிட்டர் தாய்ப்பால், தானமாகப் பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம், தாய்ப்பால் கிடைக்காத சுமார் 3 ஆயிரத்து 411 பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கப்பட்டிருக்கிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உடனடியாக வங்கியில் இருக்கும் தாய்ப்பால் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும்.

தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து மக்களுக்குப் போதிய அளவு விழிப்பு உணர்வு ஏற்படுத்த, 1992-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தேனி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது. தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக வில்லுப்பாட்டு நடத்தப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close