Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமுதாயப் பணிகளுக்காக ஆளில்லா விமானம் அறிமுகம்!

இந்தியாவிலேயே முதன் முதலில், சமுதாயப் பணிகளுக்காகக் கடலூரில் ஆளில்லா விமானம் இயக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடலூரில், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து "ஆளில்லா விமானம்'' மூலம் புகைப்படம் எடுக்கும் வான்வெளி புகைப்படவியல் திட்டப் பணியை இன்று தொடங்கியுள்ளது. இத்திட்டமானது, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. தமிழகப் புதுமைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 20 கோடி மதிப்பில் இத்திட்டபணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழிதுறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் வருவாய்துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.


விமானம் எடுத்து அனுப்பும் புகைப்படத்திலிருந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளைத் துள்ளியமாகவும், மிக விரைவாகக் கண்டறிந்து வெள்ளத் தடுப்புப் பணிகளையும், வெள்ள நிவாரண பணிகளையும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் விரைந்து மேற்கொள்ளப்படும். இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் இத்தகைய தொழில்நுட்பத்தினை இந்தியாவிலேயே முதன்முறையாக சமுதாயப் பணிகளுக்காகத் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுவும், அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
                                

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close