Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்கு தீர்வு தரும் போக்சோ சட்டம்!

போக்சோ

 

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போக்சோ சட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரமுடியும். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் மறுவாழ், இழப்பீட்டையும் இந்தச் சட்டத்தின் வழியாகப் பெற முடியும். இது குறித்த விழிப்பு உணர்வு இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. 

இதன் சாட்சியாக சமீபத்தில் அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மாணவியுடன் வகுப்பறையில் தவறாகப் பழகிய ஆசிரியர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையானது உடலளவில் குழந்தைகள் ரணப்படுத்தப்பட்டால் மட்டுமே இங்கு பெரிய பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடலளவிலான பாதிப்பு குறைவாக இருக்கும்போது ஜஸ்ட் லைக் தட் அதைக் கடந்து விடுகின்றனர். அறியாத வயதில் ஏமாற்றப்பட்டு அந்தக் குழந்தையின் அனுமதியோடு பாலியல் சீண்டல்கள் நடந்திருந்தாலும் அது தவறு தான். 

அசாம் மாநிலம் ஹைலாக்கன்டி மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பைசுதீன் லஷ்கார் 46 வயது உடையவர். அவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதைப்பயன்படுத்தி வகுப்பறையில் அந்த மாணவியோடு நெருக்கமாக இருந்துள்ளார். இந்தக் காட்சியை சக மாணவி புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த விஷயம் வெளியில் கசிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டமாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தங்கள் குழந்தை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் கூட பெற்றோர் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close