Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமரிசையாகக் கொண்டாடப்பட்ட முதுகுளத்துார் செல்வியம்மன் கோயில் திருவிழா!

 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் செல்வியம்மன் கோயில் திருவிழாவில் பறவைக்காவடி, 18 அடி அலகு குத்தி, ஆயிரம் கண்பானை, பால்குடத்துடன் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் 41-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஜூலை 29-ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கிய நிகழ்ச்சி திருவிளக்கு பூஜை, பள்ளி மாணவர்களின் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், அக்னிச்சட்டி, சக்தி கரகம் எடுத்தல், வளையல், சிம்ம அலங்காரத்தில் செல்வியம்மன் வீதிஉலா, பக்தர்கள் பால்குடம் எடுத்தலுடன் தொடங்கி சிறப்புடன் நடந்துவந்தது.

18 அடி அலகு குத்தி பூக்குழி இறங்கிய பக்தர்

விழாவின் முக்கிய நாளன்று 2,400 பக்தர்கள் பால்குடத்துடன் பூக்குழி இறங்கியும், 16 அடி அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து செல்வியம்மனுக்கு பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு, பக்தர்கள் பொங்கல் வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டித் தலைவர் வடமலையான், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் ராமமூர்த்தி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் மாடசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

முன்னதாக செல்வியம்மன் கோயில் 41-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து, காந்திசிலை, பஜார், பஸ்ஸ்டாண்ட், வடக்கூர், அய்யனார் கோயில் வழியாக செல்வியம்மன் கோயிலுக்கு 3,000 பக்தர்கள் பால்குடத்தை சென்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று, அம்மனுக்கு அபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close