Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணியிலிருந்து தூத்துக்குடிக்குக் கூடுதலாக 100 கன அடி தண்ணீர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தாமிரபரணியிலிருந்து மீண்டும் கூடுதலாக 100 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

water problem

வல்லநாடு, தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 12 உறைகிணறுகள் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் வல்லநாடு தலைமை நீரேற்று நிலைதேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வார்டு பகுதிகள் மற்றும் இதேபோல மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள உறைகிணறுகள் மூலமாக பம்பிங் செய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.  

 

     

நெல்லை மாவட்டத்திலும் போதிய மழை பெய்யாததால் அணைகளிலும் நீர் மட்டம் உயரவில்லை. வழக்கமாக தாமிரபரணியிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு தூத்துக்குடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், இத்தண்ணீர் போதுமானதாக இல்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்னையால் பெண்கள் ஆங்காங்கே காலிக்குடங்களுடன் சாலை மறியல், போரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைத் தொடர்புகொண்டு தூத்துக்குடிக்குக் கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கேட்டுக் கொண்டதால் 10 நாள்கள் வரை கூடுதலாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கூடுதலாக 100 கனஅடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வெங்கடேஷ், ‘’ போதிய மழை இல்லாததால் அணைகளில் போதியளவு தண்ணீர் இல்லை. தூத்துக்குடியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையைக் கருத்தில்கொண்டு மீண்டும் நெல்லை ஆட்சியரிடம்  தொடர்புகொண்டு பேசியுள்ளேன்.  நெல்லை ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, தூத்துக்குடிக்கு மீண்டும் கூடுதலாக 100 கன அடி தண்ணீர் திறந்து விடுவதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஓரிரு நாள்களில் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டு சீராக விநியோகிக்கப்படும். குடிநீர் பிரச்னையைத் தீர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க மாவட்டம் முழுவதும் புதிதாக 400 இடங்களில் போர்வெல் போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close