Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும்- கிளிநொச்சியில் கொளுத்தும் வெயிலில் முதியவர்கள் போராட்டம் 

ஈழத்தமிழர்

இலங்கைச் சிறைகளில் நீண்ட காலமாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் இன்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. 

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான கஜேந்திரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சனி, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் சார்பில் பாதிரியார் சக்திவேல் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். 

ஈழத்தமிழர்

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக தேசிய அமைப்பின் சார்பில், இன்று காலை 10 மணியளவில் வவுனியா பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே அமைப்பின் சார்பில், முற்பகல் 11.45 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோயில் முற்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

யாழ்ப்பாணம், நகர்ப் பகுதியில் மருத்துவ வீதியில் இன்று மாலை 4 மணியளவில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். த.தே.ம.முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் இந்தப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 

ஈழத்தமிழர்

ஆர்ப்பாட்டங்களின்போது, ”5 ஆண்டுகளாகியும் வழக்கும் இல்லை, விசாரணையும் இல்லை, அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “போர் முடிந்த தமிழ் மக்களின் நிலத்தில் ராணுவம் எதற்கு?”, “ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்”, ”தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்”, ”பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, ”எம் பிள்ளைகளைப் பயங்கரவாதி ஆக்காதே” எனப் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். 

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரும் முன்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் உட்பட ஈழத் தமிழ் மக்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் சார்பில் தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் கோரிக்கை முழக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் சார்பில் இன்று நடைபெற்ற மூன்று போராட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர், குறிப்பாக வயதான பெற்றோர், அதிலும் ஆதரவற்ற முதிய பெண்கள், எப்படியாவது தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பையும் கவலையையும் வெளிப்படுத்தினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close