Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இரோம் ஷர்மிளாவுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது'- மக்கள் கண்காணிப்பகம்!

இரோம் ஷர்மிளாவுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது எனக் காவல்துறைக்கு மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இரோம் ஷர்மிளாவுக்கும் அவரது காதலர் தேஸ்மந்த் கௌட்டின்ஹோவிற்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இரோம் ஷர்மிளாவை கொடைக்கானலை விட்டு வெளியேற்ற பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், சமூக ஆர்வலர்கள் இரோமுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.  மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன், ''இரோம் ஷர்மிளாவுக்குச் சிலர் திட்டமிட்டு இடையூறு செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அகிம்சை உணர்வுகளுக்கு உயிரூட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர் இரோம் ஷர்மிளா. உலகளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும் ஆவார். 16 ஆண்டுகள் நடந்த அவருடைய   உண்ணாநிலை அறப்போராட்டம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்துக்கு எதிரானது.  

கொடைக்கானல் பல்வேறு தரப்பினரின் வாழிடமாக இருந்துள்ளது. சுதந்திரமாக வாழும் உரிமையை அரசியல் அமைப்புச்சட்டம் இரோம் ஷர்மிளாவுக்கும் உறுதிசெய்துள்ளது. ஆனால், இதற்கெல்லாம் முரணாக இரோம் ஷர்மிளா, கொடைக்கானலை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் செய்யும் இடையூறுக்கு ஆதரவாகக் கொடைக்கானல் துணை கண்காணிப்பாளரும் 'க்யூ' பிராஞ்சும்  செயல்படுவது அதிர்ச்சியாக உள்ளது. இரோம் ஷர்மிளாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியை அறவழியில் தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுக்கிறோம். காவல்துறை இரோம் ஷர்மிளாவுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close