Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கழிவறை இல்லாவிட்டால் ரேஷன் பொருள்கள் இல்லை- புதுச்சேரி அரசு அதிரடி

'கழிவறை கட்டாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இல்லை' என்று புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

புதுச்சேரி அரசின் உள்ளாட்சித்துறை செயலர் ஜவஹர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கழிப்பறை கட்ட வசதியில்லாத புதுச்சேரி மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொள்ள 20 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது. இந்த நிதிதான் நாட்டில் வழங்கப்படும் நிதிகளிலேயே உயர்வானது. ஆனால், இந்த நிதியைப் பெற்ற பயனாளிகளின் செயலின்மையால், அகில இந்திய அளவில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான நகரங்களின் தர வரிசைகுறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், புதுச்சேரி நகராட்சி 189-வது இடத்திலும், உழவர்கரை நகராட்சி 206-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால், புதுச்சேரி அரசின் கழிவறை கட்டும் நிதியைப் பெற்றவர்கள், வரும் 20-ம் தேதிக்குள் கழிவறைகளைக் கட்டத் தவறினால், அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நிறுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கழிவறைகளைக் கட்டி முடிக்கவில்லை என்றால், கட்டி முடிக்கப்படும் வரை அவர்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச உணவுப் பொருள்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களும் நிறுத்தப்படும். கழிவறைகளைக் கட்டி முடித்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குத் தகுதியுடமை இருப்பின், அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close