Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சைக்குரிய வணிக வளாகத்தின் வரைபட அனுமதி ஆவணங்களைத் தாக்கல்செய்ய உத்தரவு !

 

 

 

கிரானைட் குவாரிகளுக்கு எதிராக முதல்முறையாக வழக்குத் தொடர்ந்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, அதிரவைத்த மேலூரின் பிரபல வழங்கறிஞர் ஸ்டாலின்,  தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். 

அந்த மனுவில், "மதுரை சொக்கிக்குளத்தில் அமைந்துள்ள 'விஷால் டி மால்' எனும் தனியார் வணிக வளாகத்தில், மதுஅருந்தக்கூடிய கிளப் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிளப்பின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, தொடர்ந்து விசாரணையில் இருந்துவரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அந்த வணிக வளாகத்துக்கு சம்பந்தபட்ட அனைத்துத்  துறை அதிகாரிகளுடன் நேரில்சென்று ஆய்வுசெய்து, அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார். இதைத் தொடர்ந்து     அந்த மனு  நீதிபதிகள் சசிதரன் - சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விஷால் டி மால் கட்டடத்தின் வரைபட உரிமம், அந்தக் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதிக்கான வரைபட ஆணை, மது அருந்தும் கிளப் நடத்துவதற்கான உரிமம், கலால் துறையின் ஆணை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர், ஆகஸ்ட் 10-ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close