Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் கலந்தாய்வு: மாணவர்கள் லிஸ்ட்டில் இந்த ஆண்டும் மெக்கானிக்கல்தான் டாப்!

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்றுவருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி, பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. நேற்று,17-வது நாளாக கலந்தாய்வு நடைபெற்றது.

மெக்கானிக்கல்


நேற்றைய கலந்தாய்வுக்காக 7,580 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 4,376 இடங்கள் நிரப்பப்பட்டன. 3,166 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. நேற்றைய கலந்தாய்வில் மட்டும் அழைப்பு விடுத்தவர்களில் 41.77 சதவிகிதம் பேர் பங்கேற்கவில்லை. 17 நாள்கள் முடிவில் 75,117 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக 40,634 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். 1,00, 339 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இ.சி.இ மற்றும் மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளில் சேரவே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துவருகின்றனர். இந்த இரண்டு படிப்புகளுக்குதான் கொஞ்சம் கிராக்கி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டும் இ.சி.இ மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கிடையேதான் போட்டி நிலவிவருகிறது.

ஆரம்பத்தில், மெக்கானிக்கல் படிப்பைவிட இ.சி.இ படிப்புகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்துவந்தனர். இதனிடையே, வழக்கம்போல  இந்த ஆண்டும் மெக்கானிக்கல் படிப்பில் சேர்வதற்கே அதிக மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை  மெக்கானிக்கல் படிப்பில் சேர 16, 085 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர். இ.சி.இ படிப்பில் சேர 14, 539 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close