Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் விதிகளை மீறிய 450 பேரின் லைசென்ஸ் ரத்து?

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எஸ். பி-யாக தர்மராஜன் வந்த பிறகு, பல குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பல கிரிமினல் செயலில் ஈடுபட்டவர்கள், வெளி மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், கட்டாய  ஹெல்மெட் சட்டத்தை குமரி மாவட்டத்தில் எஸ்.பி.தர்மராஜன் அமல்படுத்தினார். இந்தச் சட்ட விதியின்படி, ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு இணங்க, இருசக்கர வாகனத்தை ஹெல்மெட்  அணியாமல் ஓட்டினால், அதை ஓட்டுபவரிடம் இருக்கும் லைசென்ஸ், ஆர்.சி புக் அல்லது வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் என்ற வரைமுறையின்படி இனி பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது, குமரிமாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். கடந்த ஏழு மாதங்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நாகர்கோவில் சப் டிவிஷனில் மட்டும்  42 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 1 கோடி 23 லட்சத்து 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாகவும் லட்சக்கணக்கில் அபராதம் வசூலாகி உள்ளது. இதுவரை மொத்தம் 2 கோடியே 78 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி தர்மராஜன் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ்களை ரத்துசெய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, முதல்கட்டமாக  450 பேரின் லைசென்ஸ் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. அந்த லைசென்ஸ்கள், ரத்து செய்வதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close