Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்கமாட்டாரே?': பன்னீர்செல்வத்தை கலாய்த்த ராமதாஸ்!

அ.தி.மு.க மூன்று அணிகளாக இயங்கிவரும் நிலையில், அந்த அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நிலவிவருகிறது. வார்த்தை மோதல்கள் மட்டும் இருந்த நிலையில், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக போராட்டத்தை நடத்த உள்ளனர் பன்னீர் செல்வம் அணியினர்.

பன்னீர்செல்வம்


இதனிடையே, சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாகக் கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு இருப்பதாக நீண்ட நாள்களாகவே கூறப்பட்டு வருகிறது. சேகர் ரெட்டி சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய டைரியில், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெற்றதாகக் கூறப்பட்டது.


மேலும், திருப்பதிக்குச் சென்றபோது சேகர் ரெட்டியும், பன்னீர்செல்வமும் இணைந்து எடுத்த போட்டோவும் வைரலாகி வந்தது. இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன், 'சேகர் ரெட்டிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தொடர்பு உள்ளது' என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறியிருந்தார்.


இதையடுத்து, "சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்புகுறித்து யார் வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்" என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

ராமதாஸ்


இந்தச் சம்பவம்குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " இதை அந்த திருப்பதி ஏழுமலையானே ஏற்க மாட்டாரே?" என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close