Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவாஸ் ஷெரீஃப்-க்கு பதிலாக பாக்.முஸ்லிம் லீக்குக்கு புதிய தலைவரை நியமிக்க நோட்டீஸ்!

நவாஸ் ஷெரீஃப்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்குப் பதிலாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்குமாறு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி, நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ், கட்சியின் தலைமைப் பதவியை வகிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, முஸ்லிம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நவாஸ் ஷெரீஃப்-க்கு எதிராக பனாமா ஆவணங்கள் வெளியானதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், அவரது மகன்கள், மகள் ஆகியோர் வெளிநாட்டில் சொத்து சேர்த்துள்ளனர் என்று கூறி, அவரைப் பிரதமர் பதவியிலிருந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தகுதி நீக்கம்செய்தது. இதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். எனினும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்தார். தற்போது, நவாஸின் கட்சித் தலைவர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close