Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கக்கோரும் மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

உச்ச நீதிமன்றம்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகைசெய்யும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசும் காஷ்மீர் மாநில அரசும் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவருவது, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு. இந்தப் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பிரிவை நீக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, விஜயலட்சுமி ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக்கொண்ட அமர்வு, இதுதொடர்பாக மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசும் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சட்டப்பிரிவை நீக்கியிருக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய-மாநில அரசுகளின் பதில் மனுக்களைப் பொறுத்து வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close