Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம்!

தமிழக மீனவர்கள் கைதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 

 fisher man strike


நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். மீனவர்களைக் கைதுசெய்ததோடு, அவர்களின் படகுகளையும் கைப்பற்றினர்.  சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள்,  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 
இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இந்தக் கைதைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில், மீனவர்கள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் என சுமார் 5,000 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று, மீன் பிடித்தல் மற்றும் அது சார்ந்த வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close