Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர் விடுமுறை! 980 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது தமிழக அரசு

இந்த வார இறுதியில் இரண்டாவது சனிக்கிழமை (12.08.2017), ஞாயிற்றுக்கிழமை (13.08.2017), திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, செவ்வாய்க்கிழமை சுதந்திரதினம் (15.08.2017) என்று தொடர்ந்து நான்கு நாள்கள் தொடர் விடுமுறை நாள்களாக வருகிறது. இந்த விடுமுறை நாள்களில் சென்னையில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல உதவியாகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் '980 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்' என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சிறப்பு பேருந்துகள்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை மாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்' என்றும், 'அதிகக் கட்டணங்களை வசூலிக்கும் தனியார் பேருந்துகள் தொடர்பாக 1800 4256 151 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவித்து இருக்கிறார்.

பொதுவாக, தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாள்களில் மட்டுமே கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது உண்டு. ஆனால், தற்போது தொடர் விடுமுறை நாள்களைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close