Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வாழ்வில் வளர்ச்சி பெறுங்கள்'- நெசவாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை


                                

கரூரில், தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறிக் கண்காட்சியை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் இன்று தொடங்கிவைத்துப் பார்வையிட்டார்.

கரூர் பி.எல்.ஏ மஹாலில், தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய கைத்தறி தினக் கண்காட்சி மற்றும் விற்பனை முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ், இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும்,பஞ்சாப் நேஷனல் வங்கியின் முத்ரா கடன் திட்டத்தின் வாயிலாக 30 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 கடனுதவி வழங்கிப் பேசினார்.

"நலிவடைந்த நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதிலும்  உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், வேட்டிகள், படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், துண்டுகள், போர்வைகள், கைலிகள் உள்ளிட்டவை புதிய ரகங்களிலும், புதிய வடிவிலும், மேம்பட்ட தரத்திலும் சிறப்பு வண்ணங்களிலும் காட்சிக்கு வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்துக்கு ரூ.20 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் சரகத்தில் உள்ள நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்த, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்து தலா ரூ.50,000 கடனுதவியும் வழங்கப்படுகிறது. கடனுதவி பெறும் நெசவாளர்கள், உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தி, தங்கள் வாழ்வில் வளர்ச்சி பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், கரூர் மாவட்ட பொதுமக்கள் கைத்தறி ஆடைகளைப் பெருமளவு வாங்கிப் பயன்படுத்தி, நெசவாளர்களின் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close