Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிரைவர் கண் அசந்ததால் நடந்த கோர விபத்து! சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம் விபத்துள்ளானதில், டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த நண்பர்கள் 4 பேர் ஒரு காரில் குற்றாலத்தில் குளிப்பதற்காக வந்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு புறப்பட்ட அவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்துவந்துள்ளனர். காலையில் அவர்கள் வந்த வாகனம் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியில் வந்தபோது காரின் டிரைவர் கண் அசந்துவிட்டார். 

இதனால், சாலையோரத்தில் உள்ள பனை மரத்தின் மீது கார் மோதியது. இதனால், கார் சிதைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் டிரைவர் ஜாபர் சாதிக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காரில் பயணம் செய்த நண்பர்களான கமாலுதீன், சேக் அலாவுதீன், முகமது இமாமுதீன், மஹபூப்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

விபத்து

இதையடுத்து, காயம் அடைந்த 4 பேருக்கும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உயர் சிகிச்சைக்காக நெல்லை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றாலத்துக்கு வந்த வழியில் நண்பர்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, குற்றாலத்துக்கு வருபவர்கள் போதிய ஓய்வு இல்லாமல் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அத்துடன், சில டிரைவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்து நடப்பதற்கான காரணமாகி விடுகிறது. அதனால், சுற்றுலாவுக்கு வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை ஓட்டி வர வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close