Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் தொப்பியுடன் செல்ஃபி எடுத்த சி.பி.எம் தொண்டர்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியில், போலீஸ் நிலையங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் கடைநிலை தலைவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கோட்டயம் மாவட்டம்,  குமாரகத்தில் இரு நாள்களுக்கு முன்,  சி.பி.எம் கட்சித் தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் காயமடைந்தனர். 

போலீஸ் தொப்பியுடன் கைதி எடுத்த செல்ஃபி

மோதலில் தொடர்புடைய சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த மிதுன் (வயது 23) என்பவரை போலீஸார் பிடித்துச் சென்றனர். போலீஸ் நிலையத்துக்குச் சென்ற மிதுன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அணியும் தொப்பியை அணிந்துகொண்டு செல்ஃபி எடுத்தார். பின்னர், அந்தப் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்தப் புகைப்படம் இணையங்களில் பரவியது. 

பாரதிய ஜனதா கட்சியின் கோட்டயம் மாவட்டத் தலைவர் என்.ஹரி தனது ட்விட்டரில், ''மிதுனின் போலீஸ் தொப்பி அணிந்த புகைப்படத்தை ''குமாரகத்தின் பிரபல சி.பி.எம். ரவுடிக்கு போலீஸார் அளித்த வரவேற்பு'' எனக் கேலி செய்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கோட்டயம் போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மூன்று போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியும் மிதுனை சஸ்பெண்ட் செய்துள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close