Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்'- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

 

hc

தமிழகத்தில் உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாகப் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர் . கடந்தாண்டு இறுதியில் கோவையில் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக வழக்கு விசாரணையில் உள்ளது. இப்படிப் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் உயர் கல்விதுறை மீது சுமத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ராஜாசெல்வன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''தமிழகத்தில் உள்ள 8- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதுடன், பல்வேறு பணிகளும் நடைபெறாமல் முடக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவால் புதிதாகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக சேர முயலும் மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிப்பு அடைகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து வரும் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close