Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிணற்றைத் தானமாகத் தருகிறார் ஓ.பன்னீர்செல்வம்..?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கும் லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு கிணற்றையும் அதைச் சுற்றியுள்ள நிலத்தையும் தானமாகத் தர ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது.

ஓ.பி.எஸ் கிணறு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சத கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, சுமார் 25 நாள்களாகளுக்கு மேலாக லட்சுமிபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால், தனது நண்பர் பெயருக்கு அந்தக் கிணற்றை எழுதிவைத்துவிட்டார் ஓ.பி.எஸ். இந்தக் கிணறு விவகாரம் இன்று வரை ஒரு முடிவை எட்டாத நிலையில், தொடர்போராட்டங்களில் லெட்சுமிபுரம் கிராம மக்கள் இறங்கி நடத்தி வந்தனர். உண்ணாவிரதப் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் எனத் தொடர்ச்சியாகத் தினமும் போராட்டம் நடத்தியவர்கள், அடுத்தகட்டமாக அருகில் இருக்கும் கிராமத்தினரை அழைத்து மாபெரும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

ஓ.பி.எஸ் கூட்டம்

இந்நிலையில், பெரியகுளம் அருகில் இருக்கும் தனது பண்ணைவீட்டுக்கு கிராம முக்கியஸ்தர்களை அழைத்த பன்னீர்செல்வம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவு ஏதும் எட்டப்படாமல் கிராம முக்கியஸ்தர்கள் திரும்பினர். இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் நண்பரும் அந்தக் கிணற்றைப் பெற்றவருமான சுப்புராஜ் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை கிராம முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லெட்சுமிபுரம் கிராமத்துக்கு அனுப்பினார் பன்னீர்செல்வம். லெட்சுமிபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், கிணற்றையும் அதைச் சுற்றியுள்ள நிலத்தையும் தானமாகக் கொடுக்க பன்னீர்செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டதாக மக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், லெட்சுமிபுரம் கிராம மக்களின் தொடர்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது எனவும் நெகிழ்கின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close