Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'10 நாள்களில் டெங்கு முழுமையாக ஒழிக்கப்படும்': அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

Vijayabaskar

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் சுகாதாரத் துறை பணிகளை மேற்பார்வையிடுவதற்காக குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சேலம் வந்திருந்தார்கள். சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்  துப்புறவுப் பணியாளர்கள், அவர்களின் உபகரணங்களைப் பார்வையிட்ட பின்னர் துப்புறவுப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுவேன் என்ற சுகாதார உறுதிமொழி தொழிலாளர்களுடன் இணைந்து அமைச்சர் எடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், ''டெங்கு முதலில் ஶ்ரீலங்காவில் தொடங்கியது. பிறகு நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் தற்போது தமிழகத்திலும் பரவியிருக்கிறது. மாநில சுகாதாரத் துறை மூலம் தொடர்ந்து முன்னெச்சறிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகக் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் போர்க்கால நடவடிக்கைகளின் அடிப்படையில் தளஆய்வு செய்வதற்காக நான் வந்திருக்கிறேன். விழிப்பு உணர்வு பிரசாரங்கள், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப் படி சிகிச்சை, ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தி ஆகும் இடத்தை அளித்தல் எனப் பல பிரிவுகளாகப் பணியாற்றுகிறார்கள். தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்ற உறுதியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக தமிழக முழுவதும் 25,000 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 3500 ஹெல்த் இன்ஸ்பெக்டர்களும் 250க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. பல பகுதிகளில் நிலவேம்பு கசாயங்கள் கொடுக்கப்படுகிறது. சாதாரண காய்ச்சலோடு வரும் புறநோயாளிகளை உட்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்து பரிபூரணமாக நலத்தோடு அனுப்பப்படுகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் டெங்குவால் 10 பேர் இறந்திருக்கிறார்கள். 15 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்’ என்றார்.

துப்புறவுப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கும் நோக்கில், ‘துப்புறவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களோடு இணைந்து செயல்பட பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீட்டில் திறந்தவெளியில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. தேங்காய் தொட்டி, பிளாஸ்டிக் பாத்திரங்களில் நல்ல தண்ணீர் இருக்கக் கூடாது. ஏ.டி.எஸ்., கொசு நல்ல தண்ணீரில் பரவக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். தொடந்து 2 நாள்கள் காய்ச்சல் இருந்தால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டும். இப்படி செயல்பட்டால் இன்னும் 10 நாள்களில் டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழித்து விடலாம்'' என்று கூறிவிட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட்டார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close