Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாரம் இரண்டு மணிநேரம்... வருடத்துக்கு 100 மணி நேரம்..! கோவில்பட்டி தூய்மை இந்தியாவின் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் கோவில்பட்டி ரயில்நிலையத்தில் ’தூய்மை இந்தியா திட்ட’’த்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. 

clean india

தூத்துக்குடி மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணிகள், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை எனத் திட்டமிடப்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் கோவில்பட்டி ரயில் நிலைய முன்பு பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் மகளிர் மன்றம், சவுந்திரபாண்டியன் இளைஞர் விளையாட்டு சேவை மையம், நேரு யுவகேந்திரா தேசிய சேவைத் தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

cleaning

சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்குவதற்கு முன், ரயில்நிலையம் முன்பு, ’’இந்தியநாடு சுதந்திரத்துடன் தூய்மையும், வளர்ச்சியும் அடைய வேண்டும் என காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தாய் நாட்டை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கவும், வாரம் இரண்டு மணிநேரம் என வருடத்துக்கு 100 மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ளவும், உறுதியான நம்பிக்கையுடன் தூய்மை பாரதம் திட்டத்தின் அவசியத்தை கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் பிரசாரம் செய்யவும், நான் எடுக்கும் இந்த உறுதிமொழியைக் குறைந்தபட்சம் 100 இளையோர்களை எடுக்க வைப்பேன்’’ என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

பின்னர், ரயில்நிலைய வளாகம், நடைமேடை என ரயில்நிலைய பகுதி முழுவதுமுள்ள குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close