Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோழமண்டலக் கலைக் கண்காட்சி - அழகின் அணிவகுப்பு!

மனித உணர்வுகளை வெளிப்படுத்த மொழியே உதவுகிறது. ஆனால், `இதுதான் மொழி' எனக் குறிப்பிட்டுச் சொல்ல, இன்றளவும்  இயலவில்லை. பல சமயம் வார்த்தை மொழி, சில நேரம் மௌன மொழி. ஒரு பொழுதில் கண்ணீர் மொழி, மறு பொழுதிலோ நாணம் மொழி. ஆனால் இங்கோ, வண்ணங்களும் சிற்பங்களுமே மொழியாகின்றன. சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் கிராமத்தின் 50-ம் ஆண்டுகால நிறைவு விழா, அதன் வண்ணங்களுக்கு ஏற்ப மிகச் சிறப்பாக நடைபெற்றது. சோழ மண்டலம் ஆர்ட்டிஸ்ட் நிறுவனர் கே.சி.எஸ்.பனிக்கர் மகனான எஸ்.நந்தகோபாலுக்குச் சமர்ப்பணமாக, இந்தக் கலைக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.  ``சோழ மண்டலம் கிராமத்தில் வாழும் கலைஞர்களின் படைப்புகளை, மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதே தங்களது நோக்கம்'' என்பதற்கேற்ப, படைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தம் பேசுகிறது.

உள்ளே நுழைந்தது முதல் தன் ரம்மியமான அழகாலும் மெருகேற்றிய கலை வெளிப்பாட்டாலும் கண்களை நகரவிடாமல் செய்யும் காந்தங்களாக மாறி ஈர்க்கின்றன. கண்ணனின்  காதல் லீலைகளை ஓவியமாகக் காண்கையில் நம்மில் பலருக்கும் ஒருமுறை காதலித்தே ஆக வேண்டும் என்ற ஏக்கம் உண்டாகிறது. சுவரில் தொங்கும் ஓவியத்தின் பேசும் மொழியை முழுதாக உணர வேண்டும் என ஏக்கம் உண்டாகிறது.

கண்காட்சி

1970-ம் ஆண்டில் தேசிய விருதும், 1978-ம் ஆண்டில் லலித்கலா அகாடமி விருதும் பெற்றுள்ளார் நந்தகோபால். தன் தந்தையின் அஸ்திவாரத்தில் வெற்றிகரமாகக் கோட்டை எழுப்பியவர். இவரின் கைவண்ணத்தில் எழுந்த பல சிற்பங்கள், நாம் கற்றது கையளவே என்பதை மறுபடியும் நினைவூட்டுகின்றன. இந்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி அன்று தன் கலையை விண்ணுலகுக்குக் காட்ட விடைபெற்றுகொண்டார். ``இவர் நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்கு இது ஒரு முயற்சியே!'' என டிம்பிள் கேலரி குழுமத்தினர் கூறியுள்ளார்.

கண்காட்சி

நூலிழை முதல் கடவுள் வரை கலை புகுந்து சந்தம் நிறைத்து ஆயிரம் எண்ண அலைகள் பின்னி இதயத்தில் பொறிக்கப்பட்டு ஒப்புயர்வற்று  விளங்கும் அந்தக் கலை வெளிப்பாட்டை காண்கையில் இந்த உலகில் இருக்கும் தேவலோகத்தைக் காண தவறிவிட்டோம் என்பது வெளிச்சம். ​

புகைப்படம்: க.மீனாட்சி (மாணவர் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close