Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூப்பர் கப்: ரியல் மாட்ரிட் சாம்பியன்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகளின் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சூப்பர் கப் போட்டி நடத்தப்படும். இதில் நடப்பு சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், யூரோப்பா லீக் சாம்பியன் அணிகள் மோதும். ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன், ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்த சூப்பர் கப் நடக்கும். அந்த வகையில் 2017-ம் ஆண்டுக்கான சூப்பர் கப் போட்டி மெசடோனியாவில் நேற்று நடந்தது. இதில் சாம்பியன்ஸ் லீக் சாம்பியனான ரியல் மாட்ரிட், யூரோப்பா லீக் சாம்பியனான மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

ரியல் மாட்ரிட்

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் டேனி கர்வஜல் கொடுத்த பாஸை நேர்த்தியாக இடது கால் மூலம் ஒரே  மூச்சில் கோல் அடித்தார் பிரேசிலைச் சேர்ந்த காஸ்மிரோ. ஆனால், இது ஆஃப் சைட் கோல் என மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் ஜோசே மொரினியோ போட்டி முடிந்தபின் குற்றம் சாட்டினார். முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், 52-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸில் புகுந்து விளையாடிய இஸ்கோ, கோல் கீப்பரை ஏமாற்றி ஒரு கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை பெற்றது. மான்செஸ்டர் யுனைடெட் தரப்பில் லுகாகு 62-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். யுனைடெட் கிளப்புக்கு வந்தபின் இவர் அடிக்கும் முதல் கோல் இது. ஆனால், அதற்கு முன் அவர் இன்னொரு அருமையான கோல் வாய்ப்பை மிஸ் செய்திருந்தார். 

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சூப்பர் கப்பை வென்றது. அத்துடன் இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close