Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’என்னைக் கவர்ந்த மகாத்மா': அஞ்சல்துறையின் அசத்தல் திட்டம்!

   

இந்திய அஞ்சல்துறை மாணவ மாணவிகளுக்கு பல்முகத்திறன் போட்டிகளை நடத்தி வருகிறது. தற்போது அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் விதமாக தேசிய அளவிளான கடிதம் எழுதும் போட்டியை ‘என்னைக் கவர்ந்த மகாத்மா’ என்ற தலைப்பில் நடத்திவருகிறது.

இந்தப் போட்டிக்கான கால அவகாசம் 24.06.2017 முதல் 15.08.2017 வரை ஆகும். பள்ளி மாணவர்களைத் தவிர 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் இந்தக் கடிதத்தை எழுதலாம். ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதினால் இன்லேண்ட் லெட்டரில் எழுதி முதன்மை அஞ்சல்துறை தலைவர் தமிழ்நாடு சென்னை -2  என்ற முகவரிக்கு வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அஞ்சல்துறை மூலமாக அனுப்பவேண்டும். அனுப்பபட்ட கடிதங்களில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் கடிதங்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தன்று சபர்மதி ஆசிரமத்தில் ரொக்கப் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக 25,000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றல், கலைநுணுக்கம், காந்திய சிந்தனை படைத்தவர்கள் போட்டியில் பங்குபெறுமாறு சிவகங்கை மாவட்ட கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு யாரும் கடிதம் எழுதும் போட்டியில் ஆர்வம் காட்டவில்லை. கடிதம் எழுதுவதன் அவசியத்தையும் எழுத்தாற்றலையும் மாணவர்களிடம் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய சிவகங்கை மாவட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் இன்றைக்கு சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் ’என்னைக் கவர்ந்த மகாத்மா’ என்ற தலைப்பில் கலந்துகொள்ளச் செய்தார்கள். அதனடிப்படையில் சிவகங்கையில் 177 மாணவ மாணவிகளும் மானாமதுரையில் 176 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டார்கள். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close