Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முரசொலி ஒரு பயாஸ்கோப் பார்வை!'- ஸ்டாலினின் அடடே யோசனை

கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்ட 'முரசொலி' நாளிதழ் 75-வது ஆண்டைத் தொடுகிறது. இதையொட்டி வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள பவளவிழாவில் திரையுலகம், அரசியல் மற்றும் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். 

முரசொலியின் முகப்புப் பக்கம்

முரசொலி  தி.மு.க-வின் கட்சிப்பத்திரிகை மட்டுமல்ல; தமிழக அரசியல் வரலாற்றின் காலக்கண்ணாடி. திமுக தொண்டர்களுக்கு அதுதான் கட்சியின் கெஜட். 1940-களில் 'சேரன்' துவங்கி 'கரிகாலன்' 'சிலந்தி' என அடுத்தடுத்த தலைமுறைகளின் அரசியலையும் முரசொலியில் தீர்மானித்தவர் கருணாநிதி. 'உடன்பிறப்பே...' என்ற அவரின் ஒருவார்த்தை, நோயில் இருக்கிற தொண்டரையும் போராட்டக் களத்திற்கு வந்து நிற்கச் செய்துவிடும். அவரது கடிதத்தை அவரது பாணியிலேயே படித்து நெகிழ்வார்கள் தொண்டர்கள். 

1940-களில் ராஜாஜியைக் கண்டித்து, 1960-களில் காமராஜரைக் கடந்து 1980-களில் எம்.ஜி.ஆரை எதிர்த்து 1990-களில் ஜெலலிதாவை ஜெயித்து கருணாநிதி செய்த அரசியலின் அதிகாரபூர்வ ஆவணம் முரசொலி. முரசொலியுடனான கருணாநிதியின் பந்தம் உயிரும் உடலுமான ஓர் உயிருக்குச் சமமானது. இதை உணர்ந்துதான் கருணாநிதி உடல்நிலை சுகவீனமுற்று இருக்கும் நிலையில் முரசொலியின் பவள விழாவை பளபளப்பாக நடத்துகிறார் ஸ்டாலின்

முரசொல்லி பவள விழா பத்திரிகையை கருணாநிதியிடம் காண்பிக்கும் ஸ்டாலின்

நாளை தொடங்கி இரு நாள்கள் நடக்க உள்ள பவளவிழாவின் முக்கிய ஹைலைட் 'முரசொலி ஒரு பயாஸ்கோப் பார்வை'... ஆம் வரலாற்றின் பயணியாக முரசொலியின் பாதையை கலைவடிவமாகப் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல ஸ்டாலின் இப்படி ஒரு நூதன யோசனையை செயல்படுத்தியிருக்கிறார். பயாஸ்கோப் இயந்திரத்தில் நாம் காணும் காட்சிகள் எப்படி நம் பார்வையில் கடந்து செல்கிறதோ அதேபொன்று முரசொலியின் 75 ஆண்டு கால வரலாறு, விழா மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

1. முரசொலி தொடங்கப்பட்ட பின்னணி
2. சேரன் பெயரில் கருணாநிதி எழுதிய உணர்ச்சிமிகு கட்டுரைகள், கரிகாலன் சொன்ன கனல் தெறிக்கும் பதில்கள், சிலந்தி கக்கிய ஆட்சியாளர்களின் ஊழல்கள்...
3. முரசொலியில் கருணாநிதி எதிர்த்த தலைவர்கள்...
4. மிசா காலத்தில் பத்திரிகை தணிக்கையை மீறி தகவல்களைக் கொண்டு சேர்த்த கருணாநிதியின் சாதுர்யம்...
5. தன் அரசியல் எதிரி எம்.ஜி.ஆர் உடல்நிலை குன்றியபோது உருகி எழுதிய தலையங்கம்...
6. ஆட்சியே கைநழுவிப்போனாலும் பரவாயில்லை. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதியே தீருவேன் என முரசொலியில் இரங்கல் எழுதி கருணாநிதி வெளிப்படுத்திய துணிச்சல்...
7. சமகால அரசியலையும் சமூகப் பிரச்னைகளையும் கேள்வி பதில், கட்டுரைகள், கவிதைகள் என தன் அரசியல் பார்வையில் முன்வைத்த கருணாநிதியின் படைப்புகள்... இவை பயாஸ்கோப் காட்சிகளாக திரையில் விரியும்வகையில் அரியதொரு தொகுப்பை தி.மு.க தலைமை காட்சிப்படுத்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close