Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவுப்படி உரிய நேரத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் மகன் சதீஷ். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு ராமநாதபுரத்திலிருந்து தொருவளூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த அரசுப்பேருந்து மோதியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மகனின் இறப்புக்கு இழப்பீடாக 15 லட்சம் ரூபாய் கேட்டு பாண்டியம்மாள் மாவட்டக் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 5.57 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கிட உத்தரவிட்டிருந்தது. இத்தொகையை வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் தாமதம் செய்து வந்ததையடுத்து பாண்டியம்மாள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுவினை தாக்கல் செய்தார். மனுவில் தனக்கு வட்டியுடன் சேர்த்து 6.60 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேசுவரன் அரசுப்பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்திலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் அரசுப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.  

ஜப்தி செய்யப்பட்ட அரசுப்பேரூந்து

இதே போல் ராமநாதபுரம் அருகே சவேரியார் பட்டிணத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோட்டை இவர் கடந்த 2012 -ம் ஆண்டு அரசுப்பேருந்தில் அவரது சொந்த ஊருக்கு வந்து  இறங்கிய போது பேருந்தின் சக்கரங்கள் இவரது காலில் ஏறி பலத்த காயம் அடைந்தார். கால் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோட்டை தனக்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.87,500 வழங்கிடுமாறு உத்தரவிட்டது.


இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரும் மனுவை கோட்டை தாக்கல் செய்தார்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி அணில்குமார் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து கீழக்கரையிலிருந்து கமுதி செல்லும் அரசுப்பேருந்தை ஜப்தி செய்யப்பட்டது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close