Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

விவசாயிகள் தற்கொலை, கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம், சுவாமிநாதன் குழு பரிந்துரை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஜே.பி அ.தி.மு.க அல்லாத போராட்டத்தை அறிவித்திருக்கிறது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

இதன் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில்...

"தமிழக விவசாயிகள் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளனர். கடும் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை, விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இழப்பு, கடனை திருப்பி செலுத்த முடியாத துயரம் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய நிலையில் விவசாயிகளுக்கு உதவ வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்கின்றன. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுத்திருக்கின்றோம்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட விவசாயிகள் பெற்றுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவிகிதம் கூடுதலாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பாக்கித் தொகை ரூ.2000 கோடியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, பி.ஜே.பி தவிர அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழக விவசாயத்தையும் - விவசாயிகளையும் பாதுகாக்க நடைபெறவிருக்கும் இந்த கூட்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்ட  அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close