Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலத்தில் முகாமிட்ட சட்டப் பேரவை ஆய்வுக் குழு! நெல்லைக்கு வராததால் மக்கள் அதிருப்தி

ஆய்வுக் குழு

தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு குற்றாலத்தில் முகாமிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், அதனைச் சுற்றிய பகுதிகளில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டது. நெல்லையில் விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த ஆய்வுக் குழு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.   

தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் உறுப்பினர்களான எஸ் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தங்கம் தென்னரசு, டாக்டர் நந்தகுமார், மனோன்மணி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் நெல்லை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வுமேற்கொண்டனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் இக்குழுவினருடன் உடன் சென்றனர்.

மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு

தென்காசி அருகே உள்ள இலஞ்சி பேரூராட்சி பொன்னகர் பகுதியில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறு அங்கன்வாடி மையத்தை இந்தக் குழுவினர் திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து செங்கோட்டை நகராட்சி கே.சி.ரோடு பகுதியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைப் பார்வையிட்டனர். 

அச்சன்புதூர் பேரூராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதி கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளையும் பார்வையிட்ட இந்தக் குழுவினர், பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிட்டனர். மேலும், ஆய்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1.20 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தை பார்வையிட்டனர். 

ஆய்வு

தென்காசி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்துக்குச் சென்ற குழுவினர் அங்கு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் உணவின் தரத்தை ஆய்வுசெய்தனர். தென்காசி அரசு மருத்துவமனை, மேலகரம் அரசு பொது நூலகம் ஆகியவற்றிலும் இக்குழுவினர் ஆய்வுசெய்தனர். இந்தக் குழுவினர் நெல்லைக்கு வரவே இல்லை. தென்காசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டுமே இக்குழுவினர் ஆய்வுசெய்தது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ’தற்போது குற்றாலத்தில் சீசன் நன்றாக உள்ளது. குளிர் காற்றும் சாரலுமாக சூழல் சிறப்பாக இருக்கும் நிலையில் அதனைச் சார்ந்த பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்திவிட்டுச் சென்றுவிட்டனர். விவசாயம் நலிவடைந்த பகுதிகளுக்கு இந்தக் குழுவினர் வராதது அதிருப்தி அளிக்கிறது. தொழில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கும் இக்குழுவினர் சென்று பார்வையிட்டு இருக்கலாம்’’ எனத் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close