Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பூரில் காலிக்குடங்களுடன் சாலை மறியல்...!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள நடுவச்சேரி - மாரப்பம்பாளையம் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 500-ம் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அப்பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுவும் மிகவும் குறைந்த அளவிலான குடிநீரே விநியோகிக்கப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அனுதினமும் குடிநீருக்காக பெருமளவு திண்டாடி வருகின்றனர்.

ஆழ்துளைக் கிணற்று நீரும் சுத்தமாக  கைகொடுப்பதில்லை என்பதால், முறையாக குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனுக்களும் அளித்துவிட்டு காத்திருந்தனர் மக்கள். இருப்பினும் அரசு நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மெளனமாகவே இருந்து வந்ததால், கொதிப்படைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர்.

காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள் அப்பகுதியின் முக்கிய சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால், சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டொரு நாள்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close