Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆளப்போறான் தமிழன்': என்ன சொல்ல வருகிறார் விஜய்?

தோ இளைய தளபதி ஆங்... மன்னிச்சு “தளபதி”யின் ரசிகர்களை ச்சும்மா தெறிக்க விட வந்துடுச்சு மெர்சல் படத்தின் “ஆளப்போறான் தமிழன்” பாடல் டீசர்.

'தெறி' படத்தின் மூலமாக ரசிகர்களை தெறிக்க விட்டவர்கள் அட்லி. இப்போது மீண்டும் விஜய்யோடு சேர்ந்திருக்கிறார். இந்தக் கூட்டணியில் இன்னொரு ஸ்பெஷல் ஏ.ஆர்.ரஹ்மான். 

மெர்சல்

'மெர்சல்' படத்தின் பாடல்கள் அனைத்தும் வருகிற 20- ம் தேதி வெளியாகும் நிலையில், “ஆளப்போறான் தமிழன்” சிங்கிள் ட்ராக் மட்டும் 10- ம் தேதி  வெளியிடப்படுகிறது என்ற அறிவிப்பை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதுதான் தாமதம். ஒட்டுமொத்த தமிழகமே மெர்சலாகிப் போனது. ஏற்கெனவே, மெர்சல் படத்தின் முதல் போஸ்டர் ஜல்லிக்கட்டோடு தொடர்பு கொண்டிருந்ததால் செம வைரல். இந்நிலையில், தற்போது ஆளப்போறான் பாடல் டீசரை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழாலே ஒண்ணானோம்...மாறாது எந்நாளும்” என்கிற வரிகளோடு வந்து அதிர வைத்திருக்கிறது. 

“தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்” இந்த வரிகள் கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை உணர்த்துகிறதோ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, ரஜினி, கமல் என்று நடிகர்கள் அடுத்தடுத்து அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரிகள் மூலம் தனது அரசியல் கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறார் என்றும், மெர்சல் மெரினா புரட்சியைப் பற்றியதாகத்தான் இருக்கப்போகிறது என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆக இந்த தீபாவளியில் விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் ட்ரீட் கன்ஃபார்ம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close